தமிழக அரசு ஊழியர்களுக்கு போனசை உயர்த்தி வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனசை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 சதவிதம் போனஸ் மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறைத்து வழங்குவது எந்த விதத்தில் நியாயம். கடந்த ஆட்சியில் வழங்கியது போன்று தற்போது லாபம் ஈட்டும் நிறுவனங்களில் பணியாற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 20% வழங்க வேண்டும். மேலும் ஆண்டுதோறும் அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது போன்று இந்த ஆண்டும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

Related Stories: