உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி

சென்னை: உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை, 19 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி வென்று அசத்தியுள்ளார். ஏம்செஸ் ரேபிட் ஆன்லைன் செஸ் போட்டியின் 7-வது சுற்றில் 54வது நகர்த்தலின் போது மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இத்தொடரின் எட்டு சுற்றுகளுக்கு பிறகு அர்ஜுன் எரிகைசி, 5வது இடத்தில் நீடிக்கிறார்.   

ஏம்செஸ் ரேபிட் ஆன்லைன் செஸ் போட்டியில் தன் தொடக்க ஆட்டத்தில் சகநாட்டவரான விடித் சந்தோஷிடம் அர்ஜுன் எரிகைசி தோல்வியை தழுவினார்.

பின்னர் அவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நில்ஸ் கிராண்டலியஸ், அமெரிக்கா சேர்ந்த டேனியல் நரோடிட்ஸ்கி ஆகியோரை வீழ்த்திய நிலையில் தற்போது கார்ல்சனை வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார். மேலும் எரிகைசி கடந்த மாதம் ஜூலியஸ் பேர் ஜெனரேஷன் கோப்பை ஆன்லைன் போட்டியின் இறுதிப் போட்டியில் கார்ல்சனிடம் தோல்வி அடைந்து இருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories: