தொடர் மழை காரணமாக விசுவக்குடி அணை, 3 ஏரிகள் நிரம்பியது

பெரம்பலூர்: தொடர்மழை காரணமாக பெரம்பலூர் மாவட்ட விசுவக்குடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது . பெரம்பலூர் மாவட் டத்தில் கடந்த 2015 ம் ஆண்டு வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி அருகே பச்சை மலை , செம்மலை ஆகிய இருமலைக்குன்றுகளை இணைத்து , ரூ .33.67 கோடி . மதிப்பில் , பொதுப்பணித்துறையின் நீர்வன ஆதார அமைப்பின் சார்பாக நபார்டு வங்கி நிதியுதவியுடன் புதிய அணை கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டி முடிக்கப்பட்ட 2015ம் ஆண்டிலும், 2017 ம் ஆண்டும், கடந்த 2020ல் புயல் காரணமாக பச்சைமலையிலிருந்து வந்த நீர்வரத்துக் காரணமாக டிசம்பர் மாதத்திலும் என 3 முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 2021ல் கடந்த ஜூலை 8,9 தேதிகளில் பெரம்பலூர் மாவட்ட மேற்கு எல்லையான பச்சை மலைமீது பெய்த கனமழை காரணமாக விசுவக்குடி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக 43.42 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 20 கன.அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளதால், அதாவது 33.அடி உயரமுள்ள அணையில் 26 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியது. மீட்டரில் 10.30 மீட்டர் உயரமுள்ள அணையில் 8 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியது. அதே போல் நடப்பு ஆண்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் முதல் முறையாக, 43.42 மில்லியன்கன அடிகொண்டஅணையில் 20 மில்லியன் கன அடி தண்ணீர் திரும்பியுள்ளது. இதனால் 10.30 மீட்டர் உயர முள்ள அணைக்குள் 8 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணையிலிருந்து 2கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தொடர்ந்து விரைவில் முழு கொள்ளவை எட்டும் வாய்ப்புள்ளது. செம்மண் நிறத்தில் சேறு கலந்த தண்ணீர் அணைக்கு வருவதால் தண்ணீர் கலங்கலாகவே வெளியேறுகிறது.

வெங்கலம் ஏரிக்கு செல்கிறது. இதனால் விரைவில் வெங்கலம் ஏரி நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 3ஏரிகள் நிரம்பியுள்ளது. வளி மண்டல மேலடுக்கு காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பகலில் வெயில் அடித்தாலும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிற்து. இதனால் ஏரிகளுக்கு தண்ணிர் வரத்து அதிகமாகி லாடபுரம் பெரிய ஏரி, அரும்பவூர் பெரிய ஏரி, வடக்கலூர் ஏரி ஆகியவை முழு கொள்ளவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது. பெரம்பலூர் கீழேரி, துறைமங்கலம் பெரிய ஏரி, ஆய’குடி ஏரி ஆகியன 81சதவீதம் முதல் 91 சதவீதம் நிரம்பியுள்ளது. பெரம்பலூர் மேலேரி, வயலூர் ஏரி, நுத்தப்பூர் ஏரி, பகலவாடி ஏரி ஆகியவை 70 முதல் 80 சதவீதம் நிரம்பியுள்ளன. 51 சதவீதம் முதல் 70 வரை 4 ஏரிகளும் 50 சதவீதம் வரை 23 ஏரிகளும் 25 சதவீதம் வரை 36 ஏரிகளுக்கு தண்ணீர் வந்துள்ளது. என பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: