சென்னை: இந்தியில் உருவாகியுள்ள படத்தில் பின்னணி பாடியிருக்கிறார், சிம்பு. சோனாக்ஷி சின்ஹா, ஹூமா குரேஷி இணைந்து நடிக்கும் படம், ‘டபுள் எக்ஸ்எல்’. இதில் தமிழ் நடிகர் மஹத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் காமெடி டிராமா படமாக உருவாகியுள்ளது. ‘ஹெல்மெட்’ படத்தை இயக்கிய ராட்ராம் ரமணி இதை இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 4ம் தேதி இப்படம் நெட்பிளிக்சில் வெளியாகிறது.‘டபுள் எக்ஸ்எல்’ படத்தில் சொஹய் சென் இசையில் உருவாகியுள்ள ‘தாஹ்லி தாஹ்லி ‘என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இதுகுறித்த செய்தியைப் பகிர்ந்திருக்கும் ஹூமா குரேஷி, ‘எங்களது ‘டபுள் எக்ஸ்எல்’ குடும்பத்துக்கு சிம்புவை வரவேற்கிறோம். எங்கள் படத்தில் பாடியுள்ள உங்களுக்கு நாங்கள் நன்றிக்கடன்பட்டு இருக்கிறோம்.