மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூச்சியியல் வல்லுநர் ஆய்வு

கலவை :  மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் நேற்று ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மணிமாறன், உத்தரவின்பேரில் கலவை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பூச்சியைக் வல்லுனர் பிரேமா, நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனையை சுற்றி உள்ள புதர்களை அகற்றுவதற்கு குறித்தும், மருத்துவமனை தூய்மையாக வைத்திருக்க வேண்டியும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம், நோயாளிகளிடமும் அன்பாகவும் பேச வேண்டும் என மருத்துவர்கள்  செவிலியர், ஊழியர்களிடம்  கூறினார்.

பின்னர், அங்கிருந்த டெங்கு பணியாளர்களிடத்தில் ஒவ்வொரு தெருக்களிலும், பொதுமக்களின் வீடுகளிலும் செல்லும்போது   பொதுமக்களிடத்தில் பொறுமையாகவும், மரியாதையாகவும் பேச வேண்டும், பொதுமக்களுக்கு டெங்கு கொசு புழு பற்றி தெளிவுபடுத்த வேண்டும், வீடுகளில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும், வீட்டுக்கு தேவையில்லாத பொருட்கள் வீசினாள் மழை நேரத்தில் அது தேங்கும் தண்ணீரால் டெங்கு கொசு உருவாகிறது என உள்ளிட்ட பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இவ்வாறு பேசினார்.

பின்னர், டெங்கு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்தும், மேலும் டெங்கு  பணியாளர்களின் தேவைகளை கேட்டறிந்தார். இதில், சுகாதார ஆய்வாளர் பிரபு, மற்றும் மருத்துவர்கள்,  செவிலியர்கள், டெங்கு பணியாளர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: