கலைஞர் அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்வி நிதியாக ரூ.2 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 61 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000. இந்த தொகையை நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: