ஊட்டியில் மீண்டும் காலநிலையில் மாற்றம்-விவசாயிகள், பொதுமக்கள் கவலை

ஊட்டி :  ஊட்டியில்  மீணடும் காலநிலையில் மாற்றும் ஏற்பட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்கள்  மற்றும் தேயிலை விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நீலகிரி  மாவட்டத்தில் இம்முறை கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய மழை ஆகஸ்ட் மாதம் வரை  இடை விடாமல் பெய்தது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், ஊட்டி மற்றும் குந்தா  ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால், அனைத்து அணைகளும் நிரம்பி  காணப்படுகிறது. குடிநீர் ஆதாரங்களிலும் போதுமான தண்ணீர் உள்ளது.  

இந்நிலையில், செப்டம்பர் மாதம் சற்று மழை குறைந்து காணப்பட்டது. தற்போது  மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, குன்னூர் ஆகிய  தாலுக்காக்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஊட்டி, மஞ்சூர்  மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில், நேற்றும்  காலை முதல் மேக மூட்டத்துடன் வானம் காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு மேல்  ஊட்டியில் மழை கொட்டி தீர்த்தது. இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை  பெய்து வரும் நிலையில், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர்  அதிகரித்துள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள்  அவதிக்குள்ளாகியுள்ளனர்.மேலும், இந்த மாறுபட்ட காலநிலை காரணமாக தேயிலை  மற்றும் மலை காய்கறிகளை நோய் தாக்கும் அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

Related Stories: