கர்நாடகாவில் கொட்டும் மழையில் நனைந்தபடி ராகுல் காந்தி நடைப்பயணம்: செல்லும் இடம்தோறும் உற்சாக வரவேற்பு..!

பெங்களூரு: கர்நாடகாவில் இன்றும் மழையில் நனைத்தவாறு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ஒற்றுமை நடைபயணத்தை தொடர்ந்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். அவரது இந்த பயணம் கன்னியாகுமரி, கேரளா, வழியாக கடந்த 30ம் தேதி கர்நாடகாவை அடைந்தது. சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டல்பேட்டை வழியாக மைசூரு, மாண்டியாவில் பயணத்தை தொடர்ந்த ராகுல் இன்று காலை சித்திரதுர்கா மாவட்டம் ஹார்திகோட்டையில் இருந்து பயணத்தை மீண்டும் தொடங்கினார்.

வழியில் போச்கட்டே பகுதியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர் பயணத்தை தொடர்ந்தார். நேற்று இத்தேவாறு தும்குரு மாவட்டத்தில் கனமழையால் நனைந்தவாறு, ராகுல் காந்தி நடைப்பயணத்தை மேற்கொண்டார். இந்த யாத்திரையில் சிறுவர்கள், பெண்கள், என பெரும்பான்மையானவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராகுலுடன் நனைந்தவாறு பங்கேற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் வரை செல்லும் ராகுல் காந்தி இதுவரை 850க்கும் அதிகமான கி.மீட்டர் தூரத்தை கடந்துள்ளார்.

Related Stories: