தமிழகம் மருத்துவ துறையில் முதலிடம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: இந்தியாவிலேயே தமிழகம் மருத்துவ துறையில் முதலிடம் வகிக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘‘ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மருத்துவம் தொடர்பாக செயல்படும். இந்த இருக்கை சேலம் விநாயகா மிஷன் நிதியுதவியுடன் துவங்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை புரிந்து கொண்டு அதனை ஏற்றுகொள்ள வேண்டும். தமிழகம் மருத்துவ துறையில் ஏற்கனவே முதல் இடத்தில் உள்ளது. தற்போது வரை நாம் வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப கருவிகளை வாங்கி வந்தோம், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் சிப் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்தோம். வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து பொருட்களை வாங்கி வந்தால் அது எதற்கும் உதவாது என்பதற்காகவே தற்போது 10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி அதனை இங்கேயே உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவ துறையில் தற்போது எப்படி தமிழகம் முன்னோக்கி இருக்கிறதோ அதே போல ஐஓடி துறையிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்றார்.

Related Stories: