டாஸ்மாக் சீரமைப்பை செயல்படுத்த வேண்டும்: ஏஐடியூசி வலியுறுத்தல்

சென்னை: முதல்வர் அறிவித்த டாஸ்மாக் சீரமைப்பை செயல்படுத்த வேண்டும் என ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஏஐடியூசி தென் சென்னை மாவட்ட மாநாடு ஈக்காட்டுதாங்கல் மணிமேகலை அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு தமிழக அரசு, கேரள அரசை போல செயலி (App) உருவாக்க வேண்டும். கட்டிடக் கலைஞர்களுக்கான நல வாரிய திட்ட ஓய்வூதியத்தை  ரூ.6000 ஆக உயர்த்த வேண்டும்.

குறைந்த பட்ச ஊதியம் ரூ.21,000 ஆக உயர்த்தப் பட வேண்டும்.  ‘டாஸ்மாக் சீரமைப்பு’ என்ற முதல்வர் அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப் பட வேண்டும். மின் கட்டண, சொத்து வரி உயர்வு திரும்பப் பெற வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு நல வாரிய ஓய்வூதியம் 3000 ஆக உயர்த்த பட வேண்டும். அக்.11ம் தேதி (நாளை) நடைபெற உள்ள சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மனிதச் சங்கிலிக்கு ஆதரவு அளிக்கின்றோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: