சென்னையில் வெள்ளத்தை தவிர்க்க தற்காலிக இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:பாமக நிறுவனர் ராமதாஸ் ­­வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகரப் பகுதிகளில் ரூ.983 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்கப்பட வேண்டிய அவசர கால பணிகள் ஆகும். அதனால் அவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த வகையில் பார்த்தாலும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைய வாய்ப்பில்லை எனும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் 80 முதல் 85% மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், உண்மையில் 60%-65% பணிகள் மட்டும் தான் நிறைவடைந்துள்ளன.

எங்கெல்லாம் அதிக தூரத்திற்கு கால்வாய் வெட்ட வேண்டுமோ, அங்கெல்லாம் தற்காலிக இணைப்பை ஏற்படுத்தி மழை நீர் வெளியேற வகை செய்ய வேண்டும். மழை நீர் வடிகால் அமைக்கப்படும் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இவை சரி செய்யப்படாவிட்டால், மழைக்காலங்களில் மிக மோசமான விபத்துகள் ஏற்படக்கூடும். அதை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த அனைத்து சாலைகளும் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: