கார்த்திக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா

சென்னை: கார்த்திக்கு ஜோடியாக மீண்டும் நடிக்க உள்ளார் ராஷ்மிகா. கார்த்தி நடிக்க உள்ள புதிய படம் ஜப்பான். இந்த படத்தை ராஜு முருகன் இயக்க உள்ளார். இவர் ஜோக்கர், குக்கூ, ஜிப்சி ஆகிய படங்களை இயக்கியவர். இவர் அடுத்து இயக்கும் படம்தான் ஜப்பான். சமூக பிரச்னையை பற்றி பேசும் படமாக இது உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தூத்துக்குடியில் தொடங்க உள்ளது.

கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடித்திருந்தார். அதுதான் அவரது முதல் தமிழ் படம். இப்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது இரண்டாவது முறையாக ஜப்பான் படம் மூலம் கார்த்தியுடன் அவர் மீண்டும் இணைய உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கால்ஷீட் ஒத்துவந்தால் இதில் நடிப்பேன் என ராஷ்மிகா உறுதி அளித்துள்ளாராம்.

Related Stories: