ஏலகிரி மலையில் உள்ள சிறுவர் பூங்காவில் சேதமான விளையாட்டு உபகரணங்களால் விபத்து அபாயம்: சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

ஏலகிரி: ஏலகிரி மலையில் உள்ள சிறுவர் பூங்காவில் ஆபத்தான நிலையில் உள்ள சறுக்கு மர விளையாட்டுகள் உபகரணங்கால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் குழந்தைகள் அச்சத்தோடு விளையாடி வருன்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு இதன் மத்தியில் 14 சிறிய கிராமங்களை கொண்டு பசுமை நிற வண்ணத்தில் உள்ளது.

இது பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை அருகில் இம்மலை அமைந்துள்ளது. ஏலகிரி மலை சுமார் 1410.60 மீ உயரத்தில் உள்ளது. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. இங்கு படகு இல்லம், இயற்கைபூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, சாகச விளையாட்டுக்கள், சுவாமிமலை, பறவைகள் சரணாலயம், நிலாவூர் ஏரி, கதவ நாச்சி அம்மன் திருக்கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, போன்ற சுற்றுலா தலங்கள் இம்மலையில் அமைந்துள்ளன.  இதனால் பல மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும், குடும்பத்தோடும், நண்பர்களுடனும், அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் முக்கிய சுற்றுலா திடல்களில் ஒன்றான புங்கனூர் ஏரியான படகு இல்லம் உள்ளது. இந்த ஏரி 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ளது. இதன் பக்கத்தில் நிழற்கூடம் ஒன்று அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைவழி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்களுக்கு ₹5 நுழைவுக் கட்டணம் என்றும், பெரியவர்களுக்கு ₹15 நுழைவுக்கட்டணம் என்றும் வசூலிக்கப்படுகிறது. மேலும் காலாண்டு விடுமுறையையொட்டி ஏலகிரி மலைக்கு அதிக சுற்றுலா பயணிகள் குழந்தையுடன் வந்துள்ளனர்.

சிறுவர் பூங்காவில் விளையாடும் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ள சறுக்குமர இயந்திரத்தில் விளையாடி மகிழ்கின்றனர். சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடும் இயந்திரங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.மேலும்  ஊஞ்சல் விளையாட்டு தரைப் பகுதியில் குண்டும் குழியுமாக  சேதமடைந்து காணப்படுகிறது.   குழந்தைகள் விளையாடும் போது அசம்பாவிதம் ஏற்படாதவாறு விளையாட்டு இயந்திரங்களை சீரமைக்க வேண்டும் எனக் குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விளையாடும் குழந்தைகளுக்கு அசம்பாவிதம் நடப்பதற்கு முன் தடுக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளையாட்டு இயந்திரங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: