பெண்ணிடம் செயின் பறிப்பு

அண்ணாநகர்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (30). இவரது மனைவி பாத்திமா (28). இவர்கள்  கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் அமைந்துள்ள சிறப்பு சந்தையில் பொரி, கடலை வியாபாரம் செய்து வந்தனர். இதனால்,  அங்கேயே இருவரும் படுத்து தூங்குவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து, கடையை மூடிவிட்டு, இருவரும் அருகிலேயே நடைபாதையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பாத்திமாவின் கழுத்தில் 2 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஒரு மர்ம நபர் தப்பி ஓடினார்.

Related Stories: