துறைசார் பணியிட தேர்வுக்கு இந்தி, ஆங்கிலத்தில் நடத்துவதா?ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி கண்டனம்

சென்னை: ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கான தேர்வை இந்தி, ஆங்கிலத்தில் நடத்துவதற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக மகளிர் அணி தலைவரும், எம்பியுமான கனிமொழி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் சிஜிஎல் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை.  இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: