காந்தியடிகளின் சித்தாந்தத்தை ஆர்எஸ்.எஸ், பாஜ சீர்குலைக்கிறது; காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: காந்தியடிகளின் சித்தாந்தத்தை ஆர்எஸ்.எஸ், பாஜ சீர்குலைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காந்தியடிகளின் 154வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் அசன் மவுலானா எம்எல்ஏ, உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனில் காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் விழா நடந்தது.

கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: ஆர்.எஸ்.எஸ், பாஜ ஆகியவை காந்திய சித்தாந்தத்தை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி மக்களை பிரித்து வைக்கவும் முயற்சி செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.

Related Stories: