ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை முன்னிட்டு துரைப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: ராஜிவ்காந்தி சாலையில் துரைப்பாக்கம் சிக்னல் சந்திப்பில் இருந்து கார்ப்பரேஷன் சாலை சந்திப்பு சிக்னல் வரை சுமார் 500 மீட்டர் தூரம் வரை உள்ள வெளிசெல்லும் சாலையில் நாளை ஹேப்பி ஸ்ட்ரீட் நிக்ழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் அதிகாலை 2 மணி முதல் முற்பகல் 11 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

* சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லையான ஓஎம்ஆர் ராஜிவ் நகர் அருகில் கண்ணகி நகர் பகுதியில் இருந்து எஸ்ஆர்பி டூல்ஸ் நோக்கி செல்லும் அனைத்து உள்செல்லும் வாகனங்கள் துரைப்பாக்கம் சிக்னல் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி 200 அடி ரேடியல் சாலை வழியாக, காமாட்சி மருத்துவமனை, வேளச்சேரி, தரமணி, எஸ்ஆர்பி டூல்ஸ் செல்லாம்.

* ஓஎம்ஆர் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வெளிசெல்லும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்து தவிர்த்து மற்ற அனைத்து கனரக வாகனங்கள் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு, வலது புறம் திருப்பி தரமணி, வேளச்சேரி, காமாட்சி மருத்துவமனை, 200 அடி ரேடியல் சாலை, வழியாக துரைப்பாக்கம் சந்திப்பினை கடந்து வலதுபுறம் திருப்பி செல்லலாம்.

* அனைத்து இலகு ரக வாகனங்கள், கார், ஆட்டோ, பைக், அவரச கால வாகனங்கள் ஆம்புலன்ஸ் உட்பட ஓஎம்ஆர் கார்ப்பரேஷன் சாலை, பஞ்சாயத்து பிரதான சாலை, பிள்ளையார் கோயில் தெரு, ெசன்று 200 அடி ரேடியல் சாலை வழியாக துரைப்பாக்கம் சாலை சந்திப்பினை கடந்து வலதுபுறம் திரும்பி செல்லலாம்.

Related Stories: