பொள்ளாச்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர் போக்சோவில் கைது: கர்ப்பத்தை கலைப்பதாக மந்திரவாதியும் பாலியல் கொடுமை செய்த கொடூரம்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், திருப்பூர் மாட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விக்னேஷ் (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.  நாளடைவில் அது காதலாக மாறியது. சிறுமியை விக்னேஷ் பல இடங்களுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. இதற்கு, மடத்துக்குளத்தை சேர்ந்த விக்னேஷின் உறவினர் ஈஸ்வரன் என்பவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி விக்னேஷ் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் கர்ப்பத்தை கலைக்குமாறு விக்னேசின் உறவினர் சின்னசாமி (55) என்பவரிடம் தெரிவித்தார். அவரும் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை சின்னசாமி அங்குள்ள மந்திரவாதி அர்ஜூனன் (60) என்பவரிடம் அழைத்துச்சென்றார். மந்திரவாதியும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனையடுத்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்ய பழனிக்கு சென்றனர். மகள் மாயமானது குறித்து அவரது பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் 2 வாரத்திற்கு பின்னர் மீண்டும் ஏமாற்றப்பட்ட  சிறுமி வீடு திரும்பினார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு நடந்த கொடுமைகளை கூறினார். இதையடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் விக்னேஷின் தாத்தா சின்னசாமி, மந்திரவாதி அர்ஜூனன், அடைக்கலம் கொடுத்த ஈஸ்வரன் ஆகியோர் மீது போக்சோ வழக்குப்பதித்து நேற்று முன்தினம் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியை மீட்ட போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: