தஞ்சாவூரில் மயில் தோகையில் செய்யப்பட்ட விசிறிகள் விற்பனை: விசிறிக்காக தேசியப் பறவையினமான மயில்கள் அழிக்கப்படுகிறதா?

தஞ்சை: தஞ்சாவூரில் மயில் தோகையில் செய்யப்பட்ட விசிறிகள்  மற்றும் தொகைகளை வடநாட்டை சேர்த்தவர்கள் விற்பனை செய்து வருகின்றனர். விசிறிக்காக தேசியப் பறவையினமான மயில்கள் அழிக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தஞ்சாவூர்  மாவட்டத்தில் அதிகமாக மயில்கள் உள்ளன. பயிர்களை நாசம் செய்யும் மயில்கள் விஷம் வைத்து வேட்டையாடும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது . இந்நிலையில் சில நாட்களாக தஞ்சாவூர் பெரியகோவில், புன்னைநல்லுர் மாரியம்மன் கோவில், தஞ்சை காந்திஜி சாலை மற்றும் சில முக்கியமான கோவில் உள்ள பகுதிகளில் சிலர் மயில் தோகையால் செய்யப்பட்ட விசிறி, மயில் இறகு விற்பனை செய்து வருகின்றனர்.

ஒரு விசிறி ரூ.120 , ஒரு இறகு ரூ.20 க்கு விற்கின்றனர். இவர்களுக்கு எங்கிருந்து மயில் இறகு கிடைக்கிறது. இதற்காக தேசிய பறைவையினம் அழிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் சமூக ஆர்வலர்களிடையே  எழுந்துள்ளது. அதனை வாங்குபர்களும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் மயில் இறகு மற்றும் விசிறிகளை வாங்கி செல்கின்றனர். எனவே இது குறித்து மயில்கள் வேட்டையாடுவதை தவிர்க்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: