கிரீன்வேஸ் சாலையில் மெட்ரோ ரயில் பணி: வரும் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை கிரீன்வேஸ் சாலை, டி.ஜி.எஸ் தினகரன் சாலை சந்திப்பில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் 1ம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு தற்காலிக போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் கீழ்கண்டவாறு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

* அடையாரிலிருந்து மயிலாப்பூர் செல்லக்கூடிய வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பில் இருந்து இடது புறமாக திருப்பி விடப்பட்டு காமராஜர் சாலை வழியாக திரும்பி சீனிவாச அவென்யூ மூலமாக, ஆர்.கே.மட சாலை அடைந்து செல்ல வேண்டும். (நெரிசல் மிகுந்த நேரத்தில் அடையாரிலிருந்து வரும் சரக்கு வாகனங்களை மலர் மருத்துவமனை அருகில் உள்ள 4வது பிரதான சாலை வழியாக, கோட்டூர்புரம் சென்று காந்தி மண்டபம் சாலை வழியாக செல்லலாம்).

இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்தினால் காமராஜர் சாலை சீனிவாச அவென்யூ சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை கிரீன்வேஸ் ரோடு சந்திப்பு வரை, ஒரு வழிபாதையாகவும், சீனிவாச அவென்யூ மற்றும் ஸ்கூல் ரோடு முழுவதும் ஒரு வழிபாதையாகயும் மாற்றப்பட உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: