தாலின் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் பென்சிச்

தாலின்: எஸ்டோனியாவில் நடைபெறும்  தாலின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் விளையாட, சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிச் தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்தின் கேத்தி பவுல்ட்டருடன் (26 வயது, 145வது ரேங்க்) மோதிய பெலிண்டா பென்சிச் (25வயது, 14வது ரேங்க்)  6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த பவுல்ட்டர், டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த அந்த செட்டை 7-6 (7-2) என்ற கணக்கில் வென்று சமநிலை ஏற்படுத்தினார்.

எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி பவுல்ட்டரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த பென்சிச் 6-4, 6-7 (2-7), 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 44 நிமிடம் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார். செக் குடியரசின் கரோலினா முச்சோவா, ஷுவாய் ஸாங் (சீனா),  ஹடாட் மயா (பிரேசில்) ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: