பழைய பொருட்களை கொண்டு 8 மணி நேரத்தில் மாதிரி விமானத்தை உருவாக்கிய வாலிபர்

மூணாறு: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு அழகு சேர்ப்பதற்காக சிறிய மாதிரி விமானத்தை வடிவமைக்குமாறு, நெடுங்குண்டம் அருகே உள்ள இடத்தற முக்கு பகுதியை சேர்ந்த பிரின்ஸிடம் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக், பழைய தகரங்களை சேகரித்து 12 அடி நீளம், 11 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட விமான ஒன்றின் மாதிரியை தனி ஆளாக உருவாக்கும் பணியை தொடங்கினார். 8 மணி நேரத்தில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகன டயர்கள் விமான சக்கரங்களாகவும், தள்ளி கொண்டு போகும் வகையில் இந்த விமானத்தை அவர் தயாரித்துள்ளார். பிரின்ஸ் உருவாக்கிய இந்த விமானத்தை காண அப்பகுதி பொதுமக்கள் அவரது வீட்டிற்கு படையெடுத்துள்ளனர். இந்த விமான மாதிரியை நெடுங்கண்டம் அரசு தொடக்க பள்ளியில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 8 மணி நேரத்தில் தனி ஆளாக பழயை பொருட்களை கொண்டு விமான உருவாக்கிய பிரின்சுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: