சவூதி பல்பொருள் அங்காடியில் மாரடைப்பால் உயிரிழந்த தமிழர்: பொருட்களை வாங்கும் போது சுருண்டு இறந்த காட்சி வெளியீடு..!!

கடலூர்: சவூதி அரேபியாவில் வேலை பார்க்கும் தமிழர் ஒருவர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விழுந்து உயிரிழந்த காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் அன்பு. 54 வயதாகும் இவர், கடந்த 2017ம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் பணி புரிந்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித பிரச்சனையும் இன்றி வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த செப். 21ம் தேதி ரியாஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க சென்றுள்ளார்.

பொருட்கள் வாங்கி கொண்டிருக்கும் போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்காடியிலேயே கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையே அன்புவின் உடலை தாயகம் கொண்டுவரக்கோரி குடும்ப உறுப்பினர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர்மல்க மனு அளித்துள்ளனர். அன்புவின் உடலை கொண்டுவர தமிழக அரசு உதவி புரிய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். சவூதி அரேபியாவில் வேலை பார்க்கும் தமிழர் ஒருவர் உயிரிழந்த செய்தி அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: