தசரா திருவிழா நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள் பங்கேற்க அனுமதி: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தசரா திருவிழா நிகழ்ச்சியில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. தசரா திருவிழா ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் அனைத்தயும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர். தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆட அனுமதி இல்லை என்றும் ஆபாச நடனங்கள் இடம்பெற்றால் சினிமா நடிகர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் அபராதம் விதிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: