மருந்தாளுனர்கள் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்: எஸ்பி தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மருந்தாளுனர்கள் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று எஸ்பி சுதாகர் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தை அடுத்த கோளிவாக்கத்தில் உள்ள பல்லவன் மருந்தியல் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்கம், காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காவலான் கேட், மேட்டுத்தெரு, மூங்கில் மண்டபம், தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம் வழியாக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்ததது. மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஊர்வலத்தை முடித்து வைத்தார்.

ஊர்வலத்தில், காஞ்சிபுரம் மண்டல மருந்து ஆய்வாளர் சுகுமாரன், காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் லோகநாதன், முன்னாள் தலைவர் மோதிலால், பல்லவன் மருந்தியல் கல்லூரி முதல்வர் கார்த்தி மற்றும் மருந்து விற்பனையாளர் சங்க நிர்வாகிகள், கல்லூரி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: