கட்டணமில்லா பயண திட்டத்தில் தினமும் 38 லட்சம் பெண்கள் பயன்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

குன்னம்: தமிழக அரசின் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் தினமும் 38 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார். பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது;

கலைஞர் ஆட்சியில்தான் சமுதாய வளைகாப்பு திட்டம் துவங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்தவர் கலைஞர். கலைஞர் வழியில் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று முதல் திட்டமாக பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பேருந்து பயணத்தை துவக்கி வைத்தார். இதன்மூலம் ஒரு நாளைக்கு 38 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: