ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத்தி படம் தேர்வு

புதுடெல்லி: 95வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு இந்தியா சார்பில் குஜராத்தின் ‘செல்லோ ஷோ’ என்ற திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக, இந்திய திரைப்படக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்தியா சார்பில் படங்கள் அனுப்பி வைக்கப்படும். தேசிய அளவில் பல்வேறு மொழிப் படங்கள் இதற்காக போட்டியிடும். இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு இந்தியா சார்பில் குஜராத் மொழிப் படமான ‘செல்லோ ஷோ’, ஆங்கிலத்தில் ‘தி லாஸ்ட் பிலிம் ஷோ’ என்ற தலைப்பிட்ட படம் பங்கேற்பதாக, இந்திய திரைப்படக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பான் நளின் இயக்கிய இப்படம், வரும் அக்டோபர் 14ம் தேதி நாடு முழுவதும் திரைக்கு வருகிறது. இந்திய திரைப்படக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சுப்ரான் சென் கூறுகையில், ‘ஆஸ்கர் விருது போட்டிக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக ‘செல்லோ ஷோ’ படம் பங்கேற்கிறது’ என்றார்.

Related Stories: