கும்மிடிப்பூண்டி அருகே 5 கிலோ குட்கா பறிமுதல்: கடைக்காரர் கைது

கும்மிடிப்பூண்டி: பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடைகாரர் கைது செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதிகளில் நேற்று அங்கங்கே பொட்டி கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வடமாநில இளைஞர்களுக்கு விற்கப்படுவதாக சிப்காட் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பெயரில், நேற்று மாலை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டை, புதுப்பேட்டை, சிறுபுழல் பேட்டை, சிந்தலகுப்பம், எஸ். ஆர். கண்டிகை, பாலகிருஷ்ணாபுரம், ம.பொ.சி நகர் ஆகிய பகுதிகளில் போலீஸ் தீவிரமாக ஒவ்வொரு கடைகளாக சோதனை கொண்டனர். பாலகிருஷ்ணாபுரம் எல்வி. நகர் அருகே பொட்டி கடையில் சோதனை செய்தபோது சுமார் 5 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்து தெரியவந்தது.

இந்த பொருட்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் உள்ள வட மாநில இளைஞர்களுக்கு சப்ளை செய்வதற்காக இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த தனசீலன்(50) என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

Related Stories: