தேர்தல் நன்கொடை வரம்பை ரூ20 ஆயிரத்திலிருந்து ரூ2,000 ஆக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் கோரிக்கை

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு அனாமதேய நன்கொடை தொகையை ரூ20 ஆயிரத்தில் இருந்து ரூ2 ஆயிரமாக குறைக்க வேண்டும் என்று ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையர் கடிதம் எழுதி உள்ளார். அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு தனிநபர்கள், நிறுவனங்கள் நன்கொடை அளிக்கின்றன. கட்சிகள்  ரூ20 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை நன்கொடையாக பெற்றால் அதுகுறித்த முழு விவரங்களை  தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி தற்போது அமலில் உள்ளது.

சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு நன்கொடை எதுவும் வரவில்லை  என்று தெரிவிக்கின்றன. ஆனால் அந்த கட்சிகளின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கையில் ஏராளமான பணம் பெற்றதற்கான ரசீதுகளை காண்பிக்கின்றன. இதனால் நன்கொடை வரம்பான ரூ 20 ஆயிரத்துக்கு கீழ் பெரிய அளவில் பணம்  பரிவர்த்தனைகள் நடைபெறுவது உறுதியாகிறது என்று தேர்தல்  ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தநிலையில், கட்சிகளுக்கான நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மை கொண்டுவருவது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் எழுதி உள்ள கடிதத்தில்,  ‘கட்சிகளுக்கு அளிக்கப்படும் அனாமதேய நன்கொடையை ரூ20 ஆயிரத்தில் இருந்து ரூ2 ஆயிரமாக குறைக்க வேண்டும். நன்கொடை தொகை வரம்பை 20 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ20 கோடி என்று நிர்ணயிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: