குழந்தைகளிடையே பரவி வரும் ப்ளூ காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் ‘ப்ளூ’ காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்தவும், அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் ப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் மூலம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அதிக அளவு  பாதிக்கப்படுகின்ற இந்தச் சூழ்நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிவீவீயே ஏற்படுத்த வேண்டும். இதனைத் தடுப்பதற்குத் தேவையான மருந்துகளை பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக வழங்க வேண்டும். இந்தக் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு, குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: