ஆலந்தூர் 160வது வார்டில் இலவச கணினி பயிற்சி மையம்: அமைச்சர் திறந்து வைத்தார்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், 160வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கலைஞர் இலவச கணினி பயிற்சி மைய திறப்பு விழா மற்றும் 160வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா, ஆலந்தூர் புது தெருவில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் நேற்று நடந்தது. மாமன்ற உறுப்பினர் பிருந்தாஸ்ரீ முரளிகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் கே.பி.முரளிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் வார்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர், 20 பேருக்கு முதியோர் உதவித் தொகை மற்றும் கணினி பயிற்சி பெறும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் நகரமன்ற தலைவர் ஆ.துரைவேலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் எம்.ஆர்.சீனிவாசன், பாபுகுமார், சச்சீஸ்வரி, மகளிரணி சாந்தி, எம்.வி.குமார், ஸ்ரீதர், சந்துரு, கோ.ராஜவேல், வி.ராஜா, ஷகீம் ஷா,தீனன், எஸ்.காஜாமொய்தீன், பாஷா, ஹார்பர் குமார், ரம்ஜான், ஷேக் எம்.டி.சி.ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: