மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சமூகநீதியில் ஒரு முக்கிய மைல்கல்: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி பாராட்டு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் சமூக நீதியில் அடுத்து ஓர் முக்கிய மைல் கல்லாக அமையும் என்று முதல்வருக்கு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் காலை உணவின்றி பசியோடு வரக்கூடிய குழந்தைகள் கல்வியில் கவனம் செலுத்த முடியாது என்கிற காரணத்தினால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கக் கூடிய அற்புதமான திட்டத்தை அறிவித்து, அதனை தொடங்கி வைத்திருக்கிறார்.

அடித்தட்டு மக்களுக்கான கல்வியை உறுதிப்படுத்துவதற்கான இந்த திட்டம் சமூகநீதியில் அடுத்து ஓர் முக்கிய மைல் கல்லாக அமையும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான அறிவிப்புகளை கல்விக்கு அறிவித்திருப்பது மிகுந்த வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும். இப்படிப்பட்ட சிறப்பான காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்விக்கான சிறப்பு திட்டங்களை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி வாழ்த்துகிறது, பாராட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: