பிரதமர் மோடிக்கு 72-வது பிறந்தநாள்; கவர்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பிரதமர் மோடிக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு நேற்று பிறந்தநாள். அவருக்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும், வாழ்த்து தெரிவித்தார். அதில், தமிழக மக்களின் சார்பாக, தேசத்தின் சேவையில் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): பிரதமர் நரேந்திர மோடி, நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும். நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): ஒன்றிய அரசை, வல்லரசாக மாற்றக் கூடிய தங்களது கடின உழைப்பிற்கும், நாட்டுப்பற்றிற்கும் இந்த நல்ல நாளில் வாழ்த்துகிறேன். அன்புமணி (பாமக தலைவர்): பல ஆண்டுகள் நல்ல உடல்நலம், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். பொதுவாழ்வில் வெற்றி பெற்று நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும்.

Related Stories: