இன்று 144வது பிறந்தநாள் பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை

சென்னை: பெரியாரின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட உள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: