முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி

சென்னை: சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வங்கக் கடலில் 360மீ உயரத்தில் ரூ.80 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது. மாசு கட்டுப்பட்டு வாரியம் மற்றும் சுற்றுசூழல் அனுமதியைப்பெற்று அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க திட்டமிடப்ப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கியப்பணி மற்றும் எழுத்தாளுமை ஆகியவற்றை போற்றும் விதமாக தமிழக அரசு பேனா வடிவிலான நினைவு சின்னத்தை மெரினா கடற்கரையில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக கலைஞரின் நினைவிடத்தையொட்டி  மெரினா கடற்கரைக்குள் பாலம் போல் 600மீ தொலைவில் நினைவுச்சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக ஒன்றிய அரசின் கடற்சார் ஒழுங்குமுறை ஆணையத்திடம் நினைவுச்சின்னம் அமைப்பதற்கான ஒப்புதல் கோரி அளிக்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசின் கடற்சார் ஒழுங்குமுறை ஆணையம் தற்போது முதற்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.

மேலும் அடுத்தகட்டமாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உட்பட மற்ற அனுமதிகளை பெற்று முதற்கட்ட பணிகளை தொடங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: