ஜெயகுமார் எம்.பி. அளித்த புகார் வழக்கில் முகாந்திரம் இல்லை என மனு தள்ளுபடி

சென்னை: சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அம்பேத்கரின் சிலைக்கு காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் திருவள்ளூர் தொகுதி ஜெயகுமார் எம்.பி தலைமையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் சென்னை பாரிமுனை அருகே திரண்டு அங்கிருந்து ஊர்வலமாக அம்பேத்கர் சிலை நோக்கி சென்றதால் போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு காரில் இருந்த கட்சி கொடியினை பெயர்தெடுக்கப்பட்டது. கொடியை பெயர்த்தெடுத்த

தற்காக மன்னிப்பு கேட்க  வேண்டும் எனக்கோரி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் விசாரிப்பதற்கான முகாந்திரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.

Related Stories: