தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு!:பயணிகள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு தனியார் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு..!!

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை அறிந்துகொண்ட தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு செல்ல டிக்கெட் கட்டணத்தை 2 முதல் 3 மடங்கு உயர்த்தியுள்ளனர்.

அதாவது மதுரைக்கு ரூ.3100 வரை கட்டணம், நெல்லைக்கு ரூ.3950 வரை கட்டணம் நிர்ணையிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் கட்டணம் கேட்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்திருக்கிறது. இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: