தலைவர்களின் பிறந்த நாளுக்கு சத்துணவு திட்டத்தில் இனிப்பு பொங்கல்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தலைவர்களின் பிறந்த நாள் அன்று சத்துணவில் இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை: அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் ஆகிய தலைவர்களின் பிறந்த நாட்களில் வழக்கமாக வழங்கப்படும் சத்துணவுக்கு பதிலாக கூடுதல் செலவினமின்றி சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும் என ஆணையிடப்படுகிறது.

தொடக்கப்பள்ளி மாணவர் ஒருவருக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.1.30 ஆகவும், பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.1.70 ஆகவும், உயர் தொடக்கப்பள்ளி மாணவர் ஒருவருக்கு உணவுக்கான செலவீனத்தை பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.1.40ஆகவும், பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.1.80 ஆகவும் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தலைவர்களது பிறந்த நாட்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்குவதற்கு தேவைப்படும் வெல்லம், நெய் போன்ற செலவீனங்களை பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள உணவு செலவீனமான ரூ.1.70/ரூ.1.80யை பயன்படுத்தி செலவினம் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: