வி.ஐ.டி. சென்னையில் முதலாமாண்டு துவக்க விழா

சென்னை: வி.ஐ.டி சென்னையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான  துவக்க விழா நேற்று முதல் (12ம் தேதி) வி.ஐ.டியின் நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இதில் பொறியியல், மேலாண்மை, அறிவியல், வர்த்தகம் மற்றும் சட்டம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான ஹன்ஸ் ராஜ் வர்மா ஐஏஎஸ் மற்றும் ஐ.ஐ.டி சென்னையின் பேராசிரியர் மற்றும் ஏஎம்டிடிசி, ஐ.ஐ.டி ஆராய்ச்சி மையத்தின் செயலாளரான என்.ரமேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு முதல் நாளில் தேவையான மதிப்புமிக்க அறிவுரைகளை வழங்கினர்.

இதில் வி.ஐ.டியின் துணை தலைவர் ஜி.வி.செல்வம் பேசுகையில், `மாணவர்கள் தங்களின் சொல் வலிமையையும், தலைமைப் பண்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார். விழாவில் இணை துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் மற்றும் கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: