பொங்கல் பண்டிகை எதிரொலி இன்று முதல் ரயில்களில் முன்பதிவு தொடக்கம்: ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் பொதுமக்கள் ரிசர்வேஷன் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்து. தமிழக மக்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா ஆண்டுதோறும் ஜனவரி 14ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளான பொங்கலை சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவர்கள் பணி நிமித்தமாக, படிக்கவும், வியாபாரத்துக்காகவும் சென்னையில் உள்ளனர். முக்கிய பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களில்தான் தான் பண்டிகை கொண்டாடுவார்கள்.

இதனால், பஸ், கார், ரயில் என பொங்கல் பண்டிகை கொண்டாட சென்றுவிடுவார்கள். அன்றைய தினத்தில் மட்டும் சுமார் 5 முதல் 10 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பி விடுவார்கள். எனவே, பொங்கல் காலங்களில் சென்னையே காலியாக இருக்கும். போக்குவரத்தும் குறைவாகவே இருக்கும். எனவே, இந்த ஆண்டு பொங்கல் விழா சொந்த ஊர்களை சேர்ந்தவர்கள் கொண்டாட வசதியாக முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகைக்கான ரயில் மமுன்பதிவு  இன்று  முதல் தொடங்கப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 10ம் தேதி ரயில் பயணம் செய்ய விரும்புபவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்ல திட்டமிடுபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியல் அதிகரித்து ள்ளது.அதனால் தேவையான வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: