×

பலாக்காய் பிரியாணி

செய்முறை

குக்கரில் தண்ணீர் மற்றும் பலாக்காய், மஞ்சள், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விடவும். பின் ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, சாகி ஜீரா, ஏலக்காய், பிரியாணி இலை, பிரியாணி மசாலா சேர்த்து பின் முந்திரி, திராட்சை சேர்த்து பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, புதினா, கொத்தமல்லி, தயிர், மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக வதக்கியவுடன் வேக வைத்த பலாக்காயை சேர்த்து நன்றாக வதக்கி பின் Fried onion  சேர்த்து அதன்மேல் வேக வைத்த அரிசியை சேர்த்து மேலே Fried onion  சேர்த்து, கொத்தமல்லி, புதினா சேர்த்து பின் குங்குமப்பூ சாறு சேர்த்து 15 நிமிடம் தம் போட வேண்டும். இப்போது சுவையான வித்தியாசமான ஆரோக்கியமான பலாக்காய் பிரியாணி தயார். இதனுடன் பலாக்காய் வறுவல் மற்றும் தயிர் சேர்த்து பரிமாறவும்.

Tags :
× RELATED கோதுமைப் புல்லுக்கும் மருத்துவ குணம் உண்டு