வேளாண் விளை பொருட்கள் மீதான செஸ் வரி உயர்வை நீக்க வேண்டும்: அமைச்சரிடம் விக்கிரமராஜா நேரில் மனு

சென்னை: செஸ் வரி உயர்வை நீக்கக் கோரி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம், விக்கிரமராஜா மனு அளித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, அத்தியாவசிய 40 வேளாண் விளை பொருட்களுக்கு சீரான அறிக்கை செய்து செஸ்வரி விதிப்பு உடனடியாக பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டி, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் முதன்மை செயலாளர் சமயமூர்த்தி ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அவருடன், பேரமைப்பு மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, தேனி மாவட்டத் தலைவர் பி.செல்வகுமார், தென்சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் எட்வர்ட், தேனி மாவட்ட கவுரவத் தலைவர் ஏ.எம்.ஆர்.சந்திரகுமார், அரியலூர் தனஞ்செயன், ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

அமைச்சரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு தற்சமயம் எடுத்த கொள்கை முடிவின்படி, தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி வரும் பொருட்களுக்கு அனைத்து வடிவங்களிலும் என்று குறிப்பிட்டுள்ளதை ரத்து செய்து சந்தைக் கட்டண வசூலிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுகிறோம். தமிழகத்திற்குள் வரும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் சந்தை கட்டண வசூலிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: