போக்குவரத்து போலீஸ் பற்றாக்குறையால் ஸ்ரீ பெரும்புதூரில் போக்குவரத்து நெரிசல்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஸ்ரீ பெரும்புதூர்: போக்குவரத்து போலீஸ் பற்றாக்குறையால் ஸ்ரீ பெரும்புதூர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீ பெரும்புதூா் காவல் உட்கோட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீ பெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம், வல்லம்-வடகால், பிள்ளைப்பாக்கம், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இங்கு கார், லாரி, கம்யூட்டர், டயர், செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த மேற்கண்ட சிப்காட்டில் சுமாா் 700-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைக்ளுக்கு மூலப்பொருட்களைக் கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கொண்டு செல்லவும் தினமும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த பல ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீ பெரும்புதூா், சுங்குவாா்சத்திரம், மாம்பாக்கம், ஒரகடம், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.

மேலும், தொழிற்சாலைப் பணிக்காக ஆயிரகணக்கான பேருந்துகள், வேன், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தொழிலாளா்கள் ஏற்றி செல்லப்படுகின்றனா். இதனால் காலை, மாலை நேரங்களில் சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை செட்டிப்பேடு தொடங்கி, பிள்ளைச்சத்திரம் வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செட்டிப்பேடு ஜங்ஷன், மேவளூர்குப்பம் ஜங்ஷப், இருங்காட்டுக்கோட்டை சிப்காட், என்.ஜி.ஓ. காலனி ஜங்ஷன், ராஜீவ் காந்தி நினைவிடம், வல்லக்கோட்டை ஜங்ஷன், சுங்குவாா்சத்திரம், பிள்ளைச்சத்திரம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Related Stories: