காஞ்சி, செங்கையில் புதுமைப்பெண் திட்டம்; கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: சென்னையில் பாரதி கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் நிகழ்வினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவினை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் .தா.மோ.அன்பரசன் தலைமை துவக்கி வைத்து மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். கடந்த நிதியாண்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தினை தற்பொழுது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி நிதியுதவி திட்டமாக மாற்றம் பெற்று புதுமைப்பெண் திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 10 கல்லூரிகளை சார்ந்த 647 மாணவிகளுக்கு பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சுமார் 1795 மாணவிகளுக்கு பற்று அட்டை வழங்க நடவடிக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்ச்சியாக நடைபெறும் திட்டம் என்பதால் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் சென்றடையும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நேற்று வருகை புரிந்துள்ள மாணவிகளுக்கு வரவேற்பு பை வழங்கப்பட்டுள்ளது. அத்தொகுப்பு பையானது, இரண்டு புத்தகங்கள் தொழில் வழிகாட்டி புத்தகம், . நிதி பற்றிய சிறு புத்தகம் மற்றும் வங்கி பற்று அட்டை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். பணம் வங்கி கணக்கில் வரப்பெற்ற விவரம் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும். இத்திட்டத்தினை மாணவிகள் முறையாக பயன்படுத்தி தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றி கொள்ளுமாறு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆர்த்தி, காஞ்சிபுரம் எம் பி. செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழுத்தலைவர்கள் .மலர்க்கொடிகுமார் (காஞ்சிபுரம்), தேவேந்திரன் (வாலாஜாபாத்), கருணாநிதி (ஸ்ரீ பெரும்புதூர்) ஆகியோர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின்கீழ் “புதுமைப் பெண் திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு  எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன்,  சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த ரமேஷ்,  திருப்போரூர் எம்எல்ஏ  எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆ.ர.ராகுல் நாத் தலைமை தாங்கினார்.   அமைச்சர் தா.மோ.அன்பரசன் இத்திட்டத்தினை நேற்று  தொடங்கி  வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் முதற்கட்டமாக 12 கல்லூரியை சேர்ந்த 2381 மாணவிகளுக்கு வங்கி  ஏடிஎம் டெபிட் கார்ட் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் 694 மாணவிகளுக்கு  வங்கி ஏடிஎம் டெபிட் கார்ட் வழங்கப்பட உள்ளது. மேலும், இவ்விழாவிற்கு வந்துள்ள 694 மாணவிகளுக்கு தொகுப்பு பை வழங்கப்பட்டது. இந்நிகழச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் செம்பருத்தி  துர்கேஷ்,  தாம்பரம் மாநகராட்சி மேயர், க.வசந்தகுமாரி கமலகண்ணன்,செங்கல்பட்டு நகராட்சி மன்றக்குழுத் தலைவர் தேன்மொழி  நரேந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் ச. சங்கீதா.  கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் . பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: