புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கம்; க.சுந்தர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்பட்டது. இதை காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம்   தாம்பரத்தில் இருந்து படாளம் கூட்டு சாலை வழியாக வேடந்தாங்கல் வரை  அரசு பேருந்து இயங்கி வந்தது இந்தப் பேருந்தை  பாப்பநல்லூர்,  பழத்தோட்டம், திட்டாளம் கூட்டு சாலை  உள்ளிட்ட கிராமங்களின் வழியாக எல்.எண்டத்தூர் வரை வழித்தடம்  நீட்டிப்பு செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர் இதனை அடுத்து அந்த வழித்தடங்களில் உள்ள கிராமங்களை இணைக்கு வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பம்பையம்பட்டு கிராமத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார், ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டு பேருந்தை கொடியாசித்து தொடக்கி வைத்தனர். அதே பேருந்தில் எல்.எண்டத்தூர் கிராமம் வரை பொதுமக்களுடன் பயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பு, மாவட்ட கவுன்சிலர் மாலதி, ஊராட்சி மன்ற தலைவர்கள்  பலராமன், வேதாச்சலம், பிரகாஷ், பழனி, துணைத் தலைவர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேருந்து சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டதால் அப்பகுதி கிராம மக்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: