ஸ்ரீ வீரராகவ சுவாமி தேவஸ்தானம் சார்பில் பவித்ர உற்சவ விழா; 8-ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ அஹோபிலமடம் ஆதின பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ சுவாமி தேவஸ்தானம் சார்பில் பவித்ர உற்சவ விழா 8ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி வரும் 8ம் தேதி அங்குரார்பணம் சேனைநாதன் புறப்பாடு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மறுநாள் 9ம் தேதி அதிவாஸம் பெருமாள் திருமஞ்ஜனம் மற்றும் சதுஸ்தான அர்ச்சனம் வேத பாராயண ஆரம்பம் அதிவாஸ பவித்ரம் சமர்ப்பித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதேபோல் 10ம் தேதி காலை 7 மணிக்கு பெருமாள் திருமஞ்ஜனம் தொடங்கி, சுதுஸ்தான அர்சச்னம், ஹோமமும், பவித்ரம் ஸமர்ப்பித்தலும், சாத்துமறையும் பெருமாள் மாடவீதி புறப்பாடும், சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாத்துமறையம் நடைபெறுகிறது.

மேலும் 11ம் தேதி முதல் 15 ந் தேதி வியாழக்கிழமை வரை காலை சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாத்துமறையும் மாலை பெருமாள் மாடவீதி புறப்பாடும், இரவு சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாத்துமறை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவின் கடைசி நாளான 16ம் தேதி காலை சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாத்துமறையும் மாலை பெருமாள் 4 வீதி புறப்பாடும், இரவு சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், மஹாபூர்ணாஹூதி, சாத்துமறை, பெருமாள் திருமஞ்ஜனம் நிகழ்ச்சியும், இரவு 12 மணியளவில் கும்ப ப்ரோஷணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: