நுகர்பொருள் வாணிப கழகம் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: நுகர்பொருள் வாணிப கழகம் தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து இன்று பொன்விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில் அரசிற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலையில் இருந்து 12 நவீன அரசி ஆலைகள் தனியார் மயமாக்கப்படும் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இது மக்களிடையேயும், இந்நிறுவன தொழிலாளர்களிடையேயும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தனியார் மயமாக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

Related Stories: