யின் யாங் டயட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹாலிவுட் நட்சத்திரங்களின் ஃபேவரைட் டயட்!

விதவிதமான டயட் ட்ரெண்டுகளில் சமீபத்திய வைரல் மேக்ரோபயாட்டிக் டயட்தான். மேக்ரோபயாட்டிக் டயட் என்பது ஜப்பானிய ஜென் தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களில் உள்ள ஆற்றல்களை யின் மற்றும் யாங் என இரண்டு வகையாகப் பிரிக்கிறது இந்தமுறை.

இதன்படி, 5:1 என்ற விகிதத்தின் யின் மற்றும் யாங் கலந்திருப்பதே ஆரோக்கியமான உணவு. இந்த டயட் தானியங்களின் அடிப்படையிலானது. முழுதானியங்கள், பருப்புகள், பார்லி, சிறுதானியங்கள், அரிசி, கோதுமை, ஓட்ஸ், சிவப்பரிசி போன்றவை இதன் அடிப்படை உணவுகள். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களுக்கும் இதில் இடமுண்டு. நட்ஸ் மற்றும் மீன் போன்ற கொழுப்புச்சத்துகளுக்கு மட்டுமே அனுமதி.

சில மேக்ரோபயாட்டிக் நிபுணர்கள் யின் யான் என்பவை எல்லா உணவுகளிலும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துள்ளன. எனவே, அதைக் கணக்கிட்டே உண்ண வேண்டும் என்றும் சொல்கிறார்கள். உருளைக் கிழங்கு, தக்காளி, குறுமிளகு, கத்தரிக்காய், சிலவகைக் கீரைகள், அவகேடோ போன்றவற்றில் யின் ஆற்றல் அதிகம் என்பதால் இதை மைக்ரோபயாட்டிக் உணவில் சிலர் தவிர்க்கச் சொல்கிறார்கள். இந்த நைட்ஷேட் உணவுகளில் அல்கலைன் இருப்பதால் இது உடலின் கால்சிய இருப்பை பாதிக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

மேக்ரோபயாட்டிக் டயட்டில் அரிசி, கோதுமை, முழுதானியங்கள், பருப்புகளை 40-60% எடுத்துக்கொள்ளலாம்.  காய்கறிகள் - 25-30%, பீன்ஸ் போன்ற லெக்யூம்கள் - 5-10%, மீன், நட்ஸ் - 5%. சிலர் மீன் மற்றும் கடல் உணவுகளை எப்போதாவதுதான் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். மரங்கள், கண்ணாடி, பீங்கான் போன்றவற்றிலேயே உணவுகள் சமைக்கவும், பாதுகாக்கவும்பட வேண்டும் என்பதும் இந்த உணவு முறையின் விதிகளில் ஒன்று. தாமிரம், பிளாஸ்டிக், நான்ஸ்டிக் பாத்திரங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். எலெக்ட்ரிக் அவென்களையும் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக, மைக்ரோபயாட்டிக் டயட் என்பது ஒருவகை கார்போ அடிப்படையிலான டயட் என்பதால் எடைக்குறைப்பில் ஈடுபட விரும்புபவர்கள் இதை எடுக்கும் முன்பு உங்கள் மருத்துவரையோ, உணவியல் நிபுணரையோ ஆலோசிப்பது நல்லது. போதுமான உடல் உழைப்பு இல்லாத சூழலில் இந்த டயட் எடை அதிகரிப்பை உருவாக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால், உடலின் ஆற்றலை சமநிலையோடு பராமரிக்கவும் நீண்ட கால அளவில் வாழ்க்கைமுறை டயட்டாகப் பின்பற்றவும், ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் இந்த டயட் நல்ல பலன் தருவது என்றும் அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள்.

Related Stories:

>