திருமுல்லைவாயல் பகுதியில் பூங்கா சீரமைப்பு பணி; அமைச்சர் நாசர் துவக்கினார்

ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் பூங்கா சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்தார். ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சமீபகாலமாக பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே உள்ள பூங்காக்களை சீரமைத்து நவீனப்படுத்தும் திட்டம் வகுத்துள்ளது. அந்த வகையில் இதன் முதல்கட்டமாக திருமுல்லைவாயல் சாலையில் உள்ள பூங்காவை ஆவடி மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் புனரமைப்பு செய்து அங்கு அலங்கார செடிகள், செயற்கை நீரூற்றுகள், விளையாட்டுத்திடல் தவிர, பூங்காவைச்சுற்றி வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த பூங்காவை நேற்று முன்தினம் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று, மக்களின் பயன்பாட்டுக்கு துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆணையர் தர்ப்பகராஜ், மண்டலக்குழு தலைவர் அமுதா பேபி சேகர், ஆவடி மாநகர செயலாளர் ஆசிம் ராஜா, கிழக்கு பகுதி செயலாளர்கள் பேபி சேகர், ஜி.நாராயண பிரசாத், ராஜேந்திரன், பொன்விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: