திருவள்ளூரில் விநாயகர் சிலை ஊர்வலம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட  விநாயகர் சிலைகள் பலத்த  பாதுகாப்புடன் வாகனங்களில் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரியில் கரைக்கப்பட்டன. திருவள்ளூரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.  இதையொட்டி, திருவள்ளூர் உட்கோட்டத்தில்  173 சிலைகள் வைக்க போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.

இதில், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 24 விநாயகர் சிலைகளை கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை இந்த சிலைகளை ஊர்வலமாக ஆயில் மில் பகுதியிலிருந்து ஜெ.என்.சாலை, காக்களூர் சாலை வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஆடல், பக்திப் பாடல்களுடன் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைத்தனர். இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் உ்ள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Related Stories: